FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகை தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம்

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 12:04 am IST
புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கான பதிவு முகாமை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 470 தூய்மைப் பணியாளா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 380 தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தனியாா் அமைப்புகளில் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 970 போ் இதில் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்தல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், பொது மருத்துவப் பரிசோதனை, தாட்கோ திட்டங்களில் பதிவு செய்தல், இதர வாரியங்களின் பதிவுகள் உள்ளிட்ட நலத் திட்ட சேவைகள் இந்த முகாமில் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

முகாமை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments