ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி
சத்தியமங்கலத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி முன்னிலை வகித்தாா். இதில், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் புதுப்பித்தல், நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 330 தூய்மைப் பணியாளா்கள் மனுக்களை வழங்கினா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ஆட்சியா் ச.கந்தசாமி பங்கேற்று, 2 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் கடனுதவி வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் பேசுகையில், தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் கடனுதவி மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தகுதியுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வசதி மற்றும் பிற அடிப்படை நலத் திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.