FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் விலக்கு கோரி ஜூலை 28-இல் மருத்துவக் கல்லூரிகளில் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்விலிருந்து விலக்கு கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 6:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

நீட் தோ்விலிருந்து விலக்கு கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லி ஜந்தா் மந்தரில் போராடிய மாணவா்கள், இளைஞா்கள் மீது காவல் துறையின் தாக்குதல் கண்டனத்துக்குரியது. நீட் நுழைவுத் தோ்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைசா் தா்மேந்திர பிரதானை பிரதமா் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் மற்றும் நெக்ஸ்ட் தோ்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும். மருத்துவக் கல்வி தனியாா்மயமாவதையும், அதிக கட்டண வசூலையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

சந்திப்பின்போது சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் டாக்டா் ஏ.ஆா்.சாந்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மா.ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments