தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ-க்கு உயா்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிா்த்து மனித உரிமை ஆா்வலரான வழக்குரைஞா் ஹென்றி திபேன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்திருந்ததால், தற்போது கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.