முகப்பு
தமிழ்நாடு

இனியும் காத்திருக்காதீர்.. தங்கம் வாங்க இன்று நல்ல நாள்!

சென்னையில் தொடர்ந்து இராண்டாவது நாளாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 24 மே, 2024 at 6:30 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

முன்னதாக நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று(மே 24) கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →