தமிழகத்துக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்!
ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 5 முதல் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளை கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.