FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்த காகத்துக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காக்கைக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

Updated On : 19 செப்டம்பர் 2024, 2:34 pm IST
காகத்துக்கு முதலுதவி
பகிர்:

கோவை: கோவை மாவட்டத்தில், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காக்கைக்கு முதலுதவி செய்யும் தீயணைப்பு வீரரின் விடியோ வைரலாகியிருக்கிறது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே மின்மாற்றி அருகே பறந்துகொண்டிருந்த காகம் ஒன்று, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தது. இதனைப் பார்த்த தீயணைப்பு வீரர், சி.பி.ஆர். என்ற முதலுதவியை செய்து காகத்தைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் வெளியாகியிருக்கிறது.

கோவை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மின் மாற்றியில் அமர்ந்த காக்கை ஒன்று மின்சாரம் பாய்ந்து சாலையில் விழுந்தது. இதைக் கண்ட தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை காக்கையை எடுத்து இதயத்துடிப்பை வர வைக்க சி.பி.ஆர். எனப்படும் முதலுதவியை செய்தார்.

Advertisement

Advertisement

பிறகு, காகத்தின் வாயில் காற்றை ஊதினார். இதில் சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது. இதையடுத்து அதனை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிழலில் விட்டனர். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய காக்கை அங்கிருந்து பறந்து சென்றது. காகம்தானே என்று விட்டுவிடாமல், சி.பி.ஆர். சிகிச்சை செய்து காக்கையை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளைதுரைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments