FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை: வளர்ப்பு பூனையால் பாம்பு கடித்து இறந்த பெண்

பொள்ளாச்சியில் வளர்ப்பு பூனையால் பெண் ஒருவர் பாம்பு கடித்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 20 செப்டம்பர் 2024, 5:27 pm IST
பாம்பு.
பகிர்:

பொள்ளாச்சியில் வளர்ப்பு பூனையால் பெண் ஒருவர் பாம்பு கடித்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி, இவருடைய மனைவி சாந்தி 58 வயது. கணவன் ரவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சாந்தி தனது மகன் சந்தோஷ் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் வீட்டில் ஒரு பூனைக் குட்டியை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு வெளியில் வளாகத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததை பூனைக் கண்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 15 போ் மீது குண்டா் சட்டம்

திடீரென அந்த பாம்பை பிடித்த பூனை வீட்டுற்குள் போட்டுள்ளது. அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்துள்ளது. சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments