சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி, பிரதோஷ வழிபாட்டுக்காக இன்று(ஜன. 23) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.
அதேநேரம் மழை பெய்தால், அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
படிக்க: ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சச்சின்!
Advertisement
Advertisement
தொடா் மழை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தை மாத பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை (ஜன.23) முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரிக்குச் செல்வதற்கு வனத் துறை அனுமதி வழங்கியது. அதேநேரம் மழை பெய்தால், அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.