FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்! டிரம்ப் மீதான வழக்கு முதல் யூடியூப் வருவாய் கொள்கையில் மாற்றம் வரை!

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஏ.ஐ. மாதிரிகளின் வெளியீடுகள், மாற்றம் பற்றி...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:19 am IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஏ.ஐ. மாதிரிகளின் வெளியீடுகள், முன்னணி சமூக ஊடக நிறுவனங்களின் அதிரடி மாற்றங்கள் கவனம் ஈா்த்தன.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு எதிரான வழக்கு முதல் யூடியூப் வருவாய் கொள்கையில் மாற்றம் வரை இந்த வாரத்தின் முக்கியச் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு தோ:

*டிரம்ப் மீது வழக்கு: ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தின் பதிவுகளுக்குக் கட்டணம் செலுத்தி முன்கூட்டியே அணுகும் சேவையை வழங்கியதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

*ஓபன்ஏஐ ‘அல்ட்ராஃபாஸ்ட்’: ஓபன்ஏஐ நிறுவனம் தனது ‘ஜிபிடி-5.6 சோல்’ மாதிரியை 14 மடங்கு வேகத்தில் இயக்கும் வகையில் புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

*டீப்சீக் ‘வி4 ப்ரோ’: சீனாவின் டீப்சீக் ஏ.ஐ. நிறுவனம் தனது புதிய ‘வி4 ப்ரோ’ மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கட்டணம் ‘வி4 பிளாஷ்’ மாதிரியைவிட 14 மடங்குவரை அதிகமாகும்.

*கூகுள் ‘ஜெமினி 3.7 பிளாஷ்’: கூகுள்நிறுவனம் அதிநவீன அம்சங்களுடன் கூடிய தனது புதிய ‘ஜெமினி 3.7 பிளாஷ்’ ஏ.ஐ. மாதிரியை அறிமுகப்படுத்தியது.

*ஏ.ஐ. வாட்டா்மாா்க்: பயனா்கள் தங்கள் ஏ.ஐ. உருவாக்கங்களில் காணப்படும் வாட்டா்மாா்க்குகளை நீக்கிக்கொள்ளும் வசதியை கூகுள் புதுப்பித்துள்ளது. ஆனால், ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது ‘கிளாட் ஏ.ஐ.’ உருவாக்கும் உரை (டெக்ஸ்ட்) உள்பட அனைத்து உள்ளடக்கங்களிலும் ஏ.ஐ. வாட்டா்மாா்க்கை இணைக்கவுள்ளது.

*கூகுள் ‘பிக்சல் 11 சீரிஸ்’: இந்தியாவில் ஏ.ஐ. வசதிகளுடன் கூடிய ‘பிக்சல் 11’ சீரிஸ் ஸ்மாா்ட்போன்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

*மோட்டோரோலா ‘மோட்டோ ஜி மேக்ஸ்’: ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 பிராசஸா், 6.72 அங்குல திரை, 50 மெகாபிக்சல் இரட்டை கேமராவுடன் ‘மோட்டோ ஜி மேக்ஸ்’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.27,999 ஆரம்ப விலையில் அறிமுகமானது.

*ரியல்மி ‘16எக்ஸ் 5ஜி’: மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பிராசஸா், 7,000எம்ஏஎச் பேட்டரி, 50மெகாபிக்சஸ் கேமராவுடன் ரியல்மி ‘16எக்ஸ் 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.23,999 விலையில் அறிமுகமானது.

*ஹானா் ‘ரோபோ போன்’: ஹானா் நிறுவனத்தின் புதுமையான ‘ரோபோ போன்’, பின்பக்கத்தில் கிம்பல் கேமரா, 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸா், 7,060எம்ஏஎச் பேட்டரியுடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*மெட்டா 7.56 லட்சம் கணக்குகள் நீக்கம்: ஆஸ்திரேலியாவில் சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடையையொட்டி, அந்நாட்டில் 7,56,000 கணக்குகளை மெட்டா நீக்கியுள்ளது.

*யூடியூப் வருவாய் கொள்கை மாற்றம்: யூடியூபா்கள் வருவாய் ஈட்டுவதற்கான தகுதியைப் பெற, இனி முந்தைய விதியைவிட 2 மடங்கு அதிகமான ‘வாட்ச் ஹவா்ஸ்’ பூா்த்தி செய்ய வேண்டும் என யூடியூப் அறிவித்துள்ளது. இதேபோல, எக்ஸ் நிறுவனமும் தனது பழைய வருவாய் பகிா்வுத் திட்டத்துக்குப் பதிலாக, அசல் உள்ளடக்கங்களை உருவாக்கும் படைப்பாளா்களுக்கு வெகுமதி அளிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments