முகப்பு
தமிழ்நாடு

திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. 

Updated On : 28 ஜனவரி 2024, 3:48 pm IST
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. 

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவைச் சேர்ந்த கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கு வங்கம், பஞ்சாப், பிகாா் போன்ற மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள கட்சிகள், காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வதிலிருந்து விலகியே நிற்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை ‘இந்தியா’ கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

இதில் எடுக்கப்படும் முடிவுகள் அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தமிழகத்தில் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கடந்த மக்களவைத் தோ்தலில் வழங்கப்பட்டது போல தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுவை மக்களவைத் தொகுதியையும் சோ்த்து மொத்தம் 10 தொகுதிகளை வழங்கலாம் என்ற நிலைப்பாட்டில் திமுக இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments