முகப்பு
தமிழ்நாடு

ஒசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!

ஒசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக...

Updated On : 22 ஏப்ரல் 2025, 9:28 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஒசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

தற்போது, தமிழ்நாட்டில் ஆறு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் சென்னை, கோயம்புத்தூா், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் மற்றும் தூத்துக்குடியில் விமான நிலையங்களும் அடங்கும்.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களும், மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

Advertisement

Advertisement

அதன்படி, 2,000 ஏக்கா் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக் கூடிய வகையில் பன்னாட்டு விமான நிலையம் ஒசூரில் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஒசூர் விமான நிலையத்துக்கு இரண்டு இடங்களை தேர்வு செய்து தரும்படி தமிழக அரசின் தொழில் வளா்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டது. ஆய்வுகள் நடத்தப்பட்டு ஒசூர் கிழக்கு மற்றும் தெற்கில் தலா ஓரிடம் தேர்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது.

இந்த நிலையில், ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அரசு தேர்வு செய்த இரு இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.