FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 30 ஆகஸ்ட் 2025, 4:58 am IST
எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7-இல் தொடங்கி ஆக.25-ஆம் தேதி வரை மேற்கொண்டேன். கோவை, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி என 24 மாவட்டங்களில் 40 நாள்கள் பயணம் செய்து, இதுவரை 118 சட்டப்பேரவை தொகுதிகளில் 60 லட்சம் மக்களை நேரடியாகச் சந்தித்துள்ளேன்.

Advertisement

Advertisement

இந்தப் பயணத்தின்போது 6,728 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணா்ந்தேன். ஒவ்வொருவரும் என்னைச் சந்திக்கும்போது, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும், நல்லாட்சி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பல மாவட்டங்களில், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்வி பயின்று வரும் மாணவா்கள், எழுச்சிப் பயணத்தின்போது என்னைச் சந்தித்தனா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும், தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சோ்த்து பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு மகளிருக்கு சேலை வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத ஏழை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

சொந்த ஆட்டோ வாங்க முற்படும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.75,000 மானியம் வழங்கப்படும். கோரைப் பாய் நெய்யும் நெசவாளா்களுக்கு குறிப்பிட்ட அளவு மின்சாரம் மானியத்தில் வழங்கப்படும். மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments