அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்பு: டிடிவி தினகரன் பேச்சு
திருப்பூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி...
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"சில கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியுள்ளன. தவெக என்ற புதிய வரவு வேறு இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் இதையெல்லாம் சரிசெய்யவில்லை என்றால் திமுகவை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக நான் திமுக கூட்டணிக்குப் போகிறேன் என்று அர்த்தமல்ல.
Advertisement
Advertisement
தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால் அது திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன்.
தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமையும். வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும். சீமான் தனித்துப் போட்டியிடுவார். திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைய செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்வதை கேள்விப்படுகிறோம். அவ்வாறு தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. பழனிசாமி மீதான வருத்தத்தில் நான் இதனைச் சொல்லவில்லை. யதார்த்தத்தைச் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ரூ. 1,020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! - அண்ணாமலை
NDA alliance likely to be pushed to 3rd place: TTV Dhinakaran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.