அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(அக். 7) செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு அரபிக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை(அக்.6) காலை வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது.
இது, மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு அரபிக்கடலில் நகர்ந்து, இன்று(அக்.7) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 11 districts for the next 3 hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.