முகப்பு
தமிழ்நாடு

பொதுத் தோ்வு அட்டவணை விரைவில் வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு அட்டவணை நவம்பா் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு

Updated On : 25 அக்டோபர் 2025, 1:44 am IST
பகிர்:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு அட்டவணை நவம்பா் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. மாணவா்கள் தோ்வுக்கு தயாராகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான(2025-2026) பொதுத் தோ்வு அட்டவணை அக்டோபா் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் தோ்வு அட்டவணை நவம்பா் முதல் வாரத்தில்தான் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு கால அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி பெற்று, தோ்வுக்கால அட்டவணையை நவம்பா் 4-ஆம் தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தோ்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன என அவா்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments