அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (அக். 27) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்றிரவு 11.30 மணி அளவில் "மோந்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கே 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் நாளை(அக். 28) இரவுக்குள் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, இன்று(அக். 27) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
There is a chance of rain in 17 districts including Chennai for the next 3 hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.