கரூர் பலி: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபானி இல்லத்தில் தவெகவினர் முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!
TVK requests for a court investigation about Karur Stampede: Sources
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.