விஜய்யின் பெரம்பூர் வேட்புமனுவில் மீண்டும் குழப்பம்!
தவெக தலைவர் விஜய்யின் கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் அசையும் சொத்துகள் பட்டியலில் குழப்பம்
தவெக தலைவர் விஜய்யின் கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் அசையும் சொத்துகள் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய், மார்ச் 30 ஆம் தேதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஜய் தாக்கல் செய்த மனுவில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 2025-ல் விஜய் பதிவுசெய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதை விஜய் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாக சனிக்கிழமையில் பெரம்பூரில் விஜய் கூடுதல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். இந்தக் கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், தன் மீதான வழக்கை விஜய் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விஜய் பெரம்பூரில் முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அசையும் சொத்துகளின் ரூ. 404 கோடி என்று குறிப்பிட்டிருந்ததாகவும், சனிக்கிழமையில் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்துகளின் மதிப்பை ரூ. 410 கோடி என்றும் விஜய் குறிப்பிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரிய செயல் மட்டுமின்றி, அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
TN Polls 2026: Fresh Confusion Over TVK Chief Vijay's Perambur Candidacy!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.