தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில், தமிழக உரிமைகளை திமுக மட்டும்தான் காக்க முடியும் என நிரூபித்துவிட்டு கெத்தாக வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு கிருஷ்ணகிரிக்கு நான் வந்திருக்கிறேன். அன்புச் சகோதரர் ராகுல் காந்தி நேற்று தமிழகத்தில் பிரசாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடியால் கன்ட்ரோல் செய்ய முடியாது என ராகுல் காந்தி சொன்னார்.
நாளை நான் சென்னையில் பிரசாரம் செய்கிறேன். ராகுல் குமரியில் பிரசாரம் செய்யவுள்ளார். ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரமாக அறியப்பட்ட ஓசூர் நவீன தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 43,000 தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது. இதைக்கூட தட்டிக்கேட்க முடியாமல் இருக்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டு உரிமைக்காக பாஜகவிடம் குரல் கொடுக்க முடியாத பழனிசாமி என்னைப் பார்த்து கேள்வி கேட்கிறார். காரில் செல்லும்போது கிரிக்கெட் பார்த்தது தவறாம்.
Advertisement
Advertisement
காரில் போகும்போது முகத்தை மூடியதுதான் கேவலம். முதல்வர் கிரிக்கெட் பார்க்கலாமா என கேட்கிறார். முதல்வர் கிரிக்கெட் பார்ப்பது தவறு கிடையாது. முதல்வராக இருந்துகிட்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன் என சொன்னதுதான் மிகப்பெரிய கேவலம். தொலைக்காட்சியில் நேற்றிரவு மோடி பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என சொல்வதைவிட பாஜக தலைவர் மோடியின் அரசியல் உரை என்றுதான் சொல்லனும்.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது தேசியக் கொடி பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளை திட்டிப் பேசியிருக்கிறார். தேர்தல் கூட்டங்களில் பேசுவதையெல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது அப்பட்டமான விதி மீறல். இவ்வாறு குறிப்பிட்டார்.
CM Stalin has stated that the BJP is hindering the development of Tamil Nadu.