FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருச்சி தேவாலயம், மசூதி, கோயிலில் விஜய் பிரார்த்தனை!

மும்மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களில் விஜய் பிரார்த்தனை செய்தது குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 7:00 pm IST
தேவாலயம், கோயில், மசூதியில் வழிபாடு செய்த விஜய் - எக்ஸ்
பகிர்:

திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள விஜய் தேவாலயம், மசூதி மற்றும் கோயில் என மும்மதங்களைச் சேர்ந்த தலங்களில் வழிபாடு செய்தார்.

முதலில் திருச்சி கிழக்கில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து மசூதியிலும் பிறகு கோயிலிலும் வழிபாடு செய்தார்.

தமிழகத்திற்கு ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

அந்தவகையில் பெரம்பூர் உடன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய், திருச்சியில் பிரசாரம் செய்து வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் விஜய் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.

சாலைவலத்தின் ஒரு பகுதியாக அந்தோணியார் தேவாலயத்தில் விஜய் மண்டியிட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். தேவாலயத்தைத் தொடர்ந்து அருகில் இந்த மசூதி ஒன்றிற்கும் சென்று விஜய் தொழுகையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, ஹிந்து மதத்தைச் சேர்ந்த பச்சநாச்சி அம்மன் கோயிலிலும் விஜய் வழிபாடு செய்தார்.

தேர்தலில் முதல்முறை களமிறங்கியுள்ள விஜய், பிரசாரத்தின்போது தொண்டர்கள் வழங்கும் வேல், தொப்பி போன்றவற்றை ஏற்றுக்கொள்வார். இம்முறை சாலைவலத்தின் ஒரு பகுதியாக மும்மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்துள்ளார்.

summary

Vijay Offers Prayers at a Church, Mosque, and Temple in Trichy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments