பட்ஜெட் ஆவணங்கள் இறைவனுக்கான காணிக்கை அல்ல! - வேளாண் அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!
திருப்பதி கோயிலில் தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து வழிபாடு செய்ததற்கு சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் வினோத் வழிபாடு செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வேளாண் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, இன்று (ஆக. 1) திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற தமிழக வேளாண் அமைச்சர் வினோத் அரசின் நிதிநிலை ஆவணங்களை வைத்து வழிபாடு செய்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் ஆவணங்களை வேறு மாநிலத்துக்கு கொண்டு சென்றதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பட்ஜெட் (நிதிநிலை) ஆவணங்கள் இறைவனுக்கான காணிக்கை அல்ல எனக் கூறி அமைச்சர் வினோத்தின் செயலுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம்.
தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்” எனக் கூறியுள்ளார்.
Su. Venkatesan has condemned Minister Vinoth for offering prayers at the Tirupati temple with the state's agriculture budget document.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.