FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நிறைய மக்களுக்கு செய்யுங்கள் என ரஜினி வாழ்த்தினார்! அமைச்சர் வன்னி அரசு

நடிகர் ரஜினிகாந்தை சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சந்தித்தது பற்றி...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 1:04 pm IST
ரஜினிகாந்துடன் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சந்திப்பு... - X / vanni arasu
பகிர்:

நடிகர் ரஜினிகாந்தை சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று (ஆக. 3) சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் வன்னி அரசு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

பின்னர் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைய விசிக ஆதரவு தெரிவித்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றார்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவர் இன்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இதுபற்றி வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில்,

"திரை உலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித் துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.

இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. “நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Social Justice Minister Vanni Arasu meets Superstar Rajinikanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments