இன்று தங்கம் வாங்கலாமா? ஆக. 4 விலை நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 4) சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்த நிலையில் இன்று (செவ்வாய்) விலை குறைந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ.13,200 -க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,05,600 -க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஜூலை 29 அன்று தங்கம் விலை சவரன் ரூ. 1,05,240 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
வெள்ளி விலை தொடா்ந்து ஆறாவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Gold and Silver today price in Chennai aug 4
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.