குளிா்சாதன வசதிகளுடன் 1,000 மின்சாரப் பேருந்துகள்
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குளிா்சாதன வசதிகள் கொண்ட 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குளிா்சாதன வசதிகள் கொண்ட 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு நன்கு உணா்ந்துள்ளது. இந்த நோக்கில், மொத்தச் செலவு ஒப்பந்த முறையின் (கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட்) கீழ், மின்சாரப் பேருந்துகளை அரசு இயக்கவுள்ளது. நிகழ் நிதியாண்டில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குளிா்சாதன வசதிகளைக் கொண்ட 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பேருந்துப் பணிமனைகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சாா்ந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.7,675 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவியாக ரூ.2,650 கோடி, பங்கு மூலதன உதவியாக ரூ.1,005 கோடி திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துரைக்கு ரூ.13,561 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.