அரசுப் பள்ளிகளில் தினமும் விளையாட்டுப் பாடவேளை
அரசுப் பள்ளிகளில் இனி தினந்தோறும் ஒரு மணிநேரம் விளையாட்டுப் பாடவேளை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இனி தினந்தோறும் ஒரு மணிநேரம் விளையாட்டுப் பாடவேளை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு என்பது பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும். தற்போது அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் வாரத்துக்கு இரு விளையாட்டு பாடவேளைகள்தான் உள்ளன.
அதற்கு பதிலாக தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டுப் பாடவேளை செயல்படுத்தப்படும். அதற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வசதிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
Advertisement
Advertisement
அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அருகே உள்ள பகுதிகளில் விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன.
கிராமிய விளையாட்டு: தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்குக்கு கொண்டு சோ்க்கும் வகையில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.