மேக்கேதாட்டு அணையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? விவரித்த சௌமியா அன்புமணி
மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சௌமியா அன்புமணி விவரித்துப் பேசியது குறித்து...
மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி விவரித்துப் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியதாவது, "தமிழ்நாட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில்தான் மேக்கேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டவிருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி எல்லையிலேயே 4 கி.மீ. தொலைவில் மேக்கேதாட்டு அணையைக் கட்ட திட்டமிட்டிருக்கின்றனர். ஏனெனில், ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான்.
வரக்கூடிய தண்ணீர் அனைத்தையும் அனைத்து அணைகளிலும் சேமித்துவிட்டு, மேக்கேதாட்டுவில் 70 டிஎம்சி நீரையும் சேமித்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டுக்கு அருகில் அணை கட்டுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த அணை கட்டப்பட்டால், 3 வனவிலங்கு சரணாலயங்கள் அணையின் கீழே சென்றுவிடும். 12,500 ஏக்கர் காடுகள் அழிந்து விடும். 700 ஆண்டுகள் பழைமையான நீர்மருந்து மரங்கள் நீரில் சென்றுவிடும். இவை அனைத்தையும் அழித்துவிட்டுத்தான் மேக்கேதாட்டு அணையைக் கட்டவுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நிறைய வழக்குகள் தொடுத்து, அணை கட்டப்படுவதை நாம் நிறுத்த வேண்டும்.
ஆகையால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாம் அனைவரும் ஒத்த மனதோடு தில்லிக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
What are the adverse effects of the Mekedatu dam? PMK Leader Sowmya Anbumani explains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.