திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா? வானதி சீனிவாசன் பதில்
திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்...
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபிறகு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் தவெகவில் இணைந்தனர்.
மேலும் திமுகவும் பாஜகவும் இணையும் என்று தவெக தரப்பில் பலர் கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் "அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம், வரவேற்போம்" என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு கூறியிருந்தார்.
தொடர்ந்து இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என்று அதே பதிலைக் கூறினார்.
மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்றார்.
Is a DMK-BJP alliance? Vanathi Srinivasan responds
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.