FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை வந்த விமானத்தின் என்ஜின் நடுவானில் செயலிழப்பு! முழு அவசரநிலையுடன் தரையிறக்கம்!

சென்னை வந்த விமானத்தின் என்ஜின் நடுவானில் செயலிழந்தது பற்றி...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 11:25 am IST
சென்னை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் - ANI
பகிர்:

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் என்ஜின் நடுவானில் செயலிழந்த நிலையில், முழு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் (6E-723) இயக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 224 பேர் பயணித்தனர். சென்னை விமான நிலையத்துக்கு அட்டவணைப்படி, இரவு 11.30 மணியளவில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடுவானில் விமானத்தின் இடதுபுற இயந்திரம் செயலிழந்ததால், சென்னை விமான நிலையத்துக்கு அவசர தரையிறக்கத்துக்கு விமானி கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இரவு 11.29 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் விதிகளின்படி, ’முழு அவசரநிலை’ பிரகடனம் செய்யப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இதையடுத்து சற்று தாமதமாக இரவு 11.37 மணியளவில் ஓடுதளம் 25-ல் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு 11.47 மணியளவில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு மேல் நிலைமை சீரானது.

இண்டிகோ விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

summary

Engine of flight bound for Chennai fails mid-air! Lands under full emergency!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments