முதலீட்டாளர்கள் மாநாடு! 1,06,998 வேலைவாய்ப்பை உருவாக்கும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து...
சென்னையில், நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ. 67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (ஆக. 13) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், ரூ. 67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், வர்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள் மற்றும் சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூஸிலாந்து மற்றும் ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின், திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ரூ. 350 கோடி செலவிலான டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்திக்கான பயன்பாட்டைத் திறந்து வைத்தும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகலில், ரூ. 250 கோடி செலவிலான ஏரோஹப் வளாகத்தைத் திறந்து வைத்தும், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ. 122.08 கோடி செலவிலான 11 புதிய கட்டடங்களும், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் சார்பாக ரூ. 55.66 கோடி செலவிலான 2 புதிய கட்டடங்களும் என மொத்தம் ரூ. 777.74 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
மேலும், ரூ. 4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், ரூ. 2,676 கோடி முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
100 நாட்களில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகள்:
இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இன்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்” மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.
At the 'Vetri' Tamil Nadu Investors' Meet held in Chennai, 97 Memoranda of Understanding (MoUs) were signed in the presence of Chief Minister C. Joseph Vijay, entailing investments worth ₹67,452 crore and the creation of 1,06,998 jobs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.