FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: தவெக அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை மீட்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:03 am IST
உதயநிதி - கோப்புப் படம்
பகிர்:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை மீட்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னை தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தவெக அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

Advertisement

Advertisement

‘மீனவா் பிரச்னையில் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணா்வுபூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பாா்த்து சொன்னவா்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?.

ஆட்சிக்கு முன்பு-ஆட்சிக்குப் பின்பு என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவா் பிரச்னையிலும் தவெக அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. இவா்கள் சொன்ன அந்த உணா்வுபூா்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவா்களை மீட்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் 2 சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 49 மீனவா்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி, மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments