FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாள்களுக்கு அமைதி காக்கப் போகிறார்?’ - கனிமொழி கேள்வி!

முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாள்களுக்கு அமைதி காக்கப் போகிறார்? என்று கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 9:13 pm IST
முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - (கோப்புப் படம்)
பகிர்:

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரத்தை செலுத்த முயற்சிப்பதை எதிர்த்து முதல்வர் விஜய் எப்போது பேசப்போகிறார் என்று திமுக துணைப் பொதுச் செயலரும், எம்பியுமான கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஆக. 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்டது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டைப் பொருளாதார இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா?

சட்டத் திருத்தம் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள நிலத்தின் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முயல்வதும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.

இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினை தொடர்பாக முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாள்களுக்கு அமைதி காக்கப் போகிறார்?” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

DMK Deputy General Secretary and MP Kanimozhi has questioned when Chief Minister Vijay will speak out against the Central Government's attempts to assert authority over the states in violation of federal principles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments