FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மக்களவைத் தலைவர் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை? கனிமொழி கேள்வி!

தேநீர் விருந்தில் திமுக பங்கேற்றதில் என்ன சர்ச்சை என கனிமொழி கேள்வி...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:09 pm IST
திமுக கனிமொழி - x / kanimozhi
பகிர்:

மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நிறைவையொட்டி, மக்களவை எம்.பி.க்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை தேநீா் விருந்து அளித்தாா்.

இந்த விருந்தை எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில், திமுக மட்டும் கலந்துகொண்டது விவாதத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி பேசியதாவது:

“மக்களவை தலைவர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகளை மாற்றுவது தொடர்பாக பேசுவதற்குதான் சென்றோம்.

இந்தியா கூட்டணியின் தற்போது திமுக விலகிவிட்டது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,

“முன்பு மறைமுகமாக பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. தற்போது வெளிப்படையாக கூட்டணி அமைத்துள்ளது. ஆட்சியை இழந்த நிலையில், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க பாஜகவிடம் கொத்தடிமையாக சரணடைந்துவிட்டது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளித்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக ஒருமுறைகூட யாரும் கூறவில்லை. அவர்களின் குடும்ப சொத்துகளை பாதுகாத்துக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

summary

What is the controversy over attending the Lok Sabha Speaker's tea party? Kanimozhi speaks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments