FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:33 pm IST
முதல்வர் விஜய். - கோப்புப்படம்
பகிர்:

சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின்  குடும்பத்தினருக்கு  ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

”சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஏ. தர்மராஜ்
(வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். 

Advertisement

Advertisement

முதல்நிலைக் காவலர் தர்மராஜின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister C. Joseph Vijay has announced financial assistance and conveyed his condolences to the family of the police officer who collapsed while on duty during the Independence Day parade and subsequently passed away in the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments