காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை
காஞ்சிபுரத்தில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பற்றி.....
காஞ்சிபுரத்தில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி பகுதியில் நேற்று ஆடி மாதத் திருவிழா நடைபெற்றது. அப்போது, நள்ளிரவில் சிலர் மதுபோதையில் ரேடியோவில் திரைப்பட பாடல் போடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மதுபோதையில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
அதே நேரத்தில், அங்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு, விக்கி ஆகிய இரண்டு இளைஞர்களைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் சந்துரு, விக்கி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Advertisement
Advertisement
இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே, அருகிலிருந்த போலீஸார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மற்ற போலீஸார் உடல்களைக் கைப்பற்ற முயன்றபோது, பலியான இளைஞர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பில் திருவிழா நடக்கும்போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், அவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரின் உடல்களும் கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தப்பியோடிய மர்மக் கும்பலைப் பிடிக்க போலீஸார், தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடி மாதத் திருவிழாவில், இரவில் நடந்த இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A tense situation has prevailed in Kanchipuram following the brutal hacking to death of two youths during a temple festival clash.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.