சுதந்திர நாள் விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது பற்றி...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தி. சினேகா மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்த் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
Advertisement
Advertisement
பின்னர் 38- பயனாளிகளுக்கு ரூ. 1.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 6- பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள், ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பில் இரண்டு பெண்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலும்
5- நபர்களுக்கு ரூ. 2.50 லட்சத்திலும் தாட்கோ மூலம் 9- நபர்களுக்கு ரூ. 25.91 லட்சத்தில் தொழில் கடன் மானியம், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ. 4 லட்சத்தில் வேளாண் இந்திரங்கள் மானியம் உள்பட 38 பயனாளிகளுக்கு 43 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தி. சினேகா வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் மூவண்ண பலூன், அமைதியை குறிக்கும் வகையில் வெண்புறாக்களும் பறக்க விடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் காண்போர் மனதை கவர்வதாக அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யா ஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆசிக் அலி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பாலகிருஷ்ணன் (பொ) மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.நளினி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Independence day celebration in kanchipuram district
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.