FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தலைவரை புகழ்ந்த எ.வ. வேலுவின் பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்!

திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு பேச்சால் முதல்வர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:31 pm IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - படம்: சட்டப்பேரவை நேரலை
பகிர்:

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை புகழ்ந்து பேசிய நிலையில், அவையில் இருந்த முதல்வர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.

சட்டப்பேரவை இன்று(ஆக. 18) காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில், கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகவும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப் பணித் துறை), மனிதவள மேலாண்மைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

அப்போது திமுக உறுப்பினர் எ.வ. வேலு பேசும்போது, “முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில், டெண்டரை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு, டெண்டரின் மதிப்பை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது என்று பேசினார். ஊழல் என்ற வார்த்தையை எடுத்துவிடலாம்.

முதல்வரை யாரோ தவறாக வழிநடத்திவிட்டார்களோ, அவருக்கு செய்தி தவறாக வந்துசேர்ந்திருக்கிறதோ, அதிகாரிகள் தவறாக எழுதிக்கொடுத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ”முதல்வரை யாரோ தவறாக வழிநடத்திவிட்டார்களோ, தவறாக எழுதிக்கொடுத்துவிட்டார்களோ” என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினார்.

பேரவைத் தலைவரும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், ”முதல்வரை யாரும் வழிநடத்த தேவையில்லை. அவர் எல்லாம் தெரிந்தவர்” என்றார்.

அதேபோல, எ.வ.வேலு பேசிய ’சலாம் போட்டார்கள்’ என்ற வார்த்தையை பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நீக்கியதாகக் கூறினார்

இதனையடுத்து பேசிய எ.வ.வேலு, "நீங்கள் எதை எடுத்தாலும் நியாயமாகத் தான் செய்வீர்கள். எடுத்துவிடுங்கள்" எனக் கூற, முதல்வர் விஜய் சிரிக்க, பேரவைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.

summary

In the Legislative Assembly, when DMK MLA E.V. Velu spoke in praise of Speaker J.C.D. Prabhakar, all the members present—including Chief Minister Vijay—burst into laughter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments