FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வருகையில்லா பத்திரப்பதிவு! சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால் மக்கள் அவதி!

வருகையில்லா பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட்டாலும்கூட சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:05 pm IST
பகிர்:

கோவை: தமிழகம் முழுவதும், ஆன்லைன் முறையில் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கேற்ப சர்வர் திறன் அதிகரிக்கப்படாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு பணிகள் மற்றும் டோக்கன் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 (STAR 3.0) எனும் மென்பொருள் மேம்பாடு மற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சர்வர் வேகம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கோவை மாவட்டத்தில், மொத்தமாக 19 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள, 10 அலுவலகங்களில் மட்டும் 50 ஆவணங்கள் மட்டுமே பதிவாகி உள்ளது.

சர்வர் தாமதம் காரணமாக பாக்கி ஆவணங்கள் அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்கனவே முன்பதிவு செய்து டோக்கன் பெற்று நேரில் வந்தவர்களுக்கு, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மதுக்கரை பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவுக்காக வந்திருந்த மக்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் கூறியதாவது.. தமிழகத்தில், 'ஸ்டார் 3.0 வருகையில்லா ஆவணப்பதிவுத் திட்டத்தில் உள்ள சில குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். சர்வரின் திறனை அதிகரிக்க வேண்டும். மோசடிக்கு வழிவகுக்கும் சில காரணிகளை மாற்றியமைத்தால்தான் இத்திட்டம் வெற்றி பெறும் என்றனர்.

மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசின் இணையதள சேவை மிகவும் குறைந்த நிலையில் உள்ளதால் முகப்பு பக்கங்களை கூட திறக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். காலையில் இருந்து இதுவரை 3 பத்திரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

வருகையில்லா ஆவணப்பதிவு ஸ்டார் 3.0 திட்டம் அறிமுகமான முதல் நாளே சர்வர் தொய்வடைந்ததால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டதுடன் தற்போதைய நிலையைச் சரிபார்க்கவும் சர்வர் கோளாறு சரிசெய்யப்படும் வரை வழக்கமான வில்லங்கச் சான்றிதழ் என்றழைக்கப்படும் (EC) தேடுதல், புதிய ஆவணப் பதிவுக்கான முன்பதிவு போன்ற சேவைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments