விஜய் மாமா.. கர்நாடகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் மகள் வெளியிட்ட விடியோ
விஜய் மாமா எங்க வீட்டுக்கு வாங்க என்ற கர்நாடகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் மகள் வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.
கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டேவிட் குமார் என்பவரின் மகள், தமிழக தல்வர் விஜய்க்கு உணர்ச்சிப்பூர்வமாக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.
கா்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் மூவா் கொல்லப்பட்டனர். ஒருவா் படுகாயமடைந்தார்.
கொல்லப்பட்ட மூன்று பேரில், தோமையார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் குமார் மகள் பெஸ்ஸி, தனது குடும்பத்தாருடன் அமர்ந்தபடி, முதல்வர் விஜய்யை வீட்டுக்கு வாருங்கள், எங்களுக்கு உதவுங்கள் என்று கோரி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அந்த விடியோவில், விஜய் மாமா, எங்கள் அப்பா இறந்துவிட்டார், எங்கள் அப்பா இருந்திருந்தால், நாங்கள் என்னென்ன வாங்கி வரச் சொல்கிறேனோ, அது அனைத்தையும் வாங்கித் தருவார். இப்போ எங்கள் அப்பா இல்லையே, எங்களுக்கு இதையெல்லாம் யார் வாங்கித் தருவார்கள்?
எங்கள் ஊரில் நிறைய பேர் புது வீடு கட்டுகிறார்கள். நீங்களும் கட்ட வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். அதனால் அவரும் கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறார். இப்போது அந்தக் கடனையெல்லாம் யார் அடைப்பார்கள்.
நீ நன்றாக படித்தால் கலெக்டர் ஆகலாம் என்று கூறுவார். இப்போது நான் எப்படி படிப்பது? நாங்கள் இப்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம், யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. நீங்களாவது வந்து பாருங்கள் விஜய் மாமா என்று கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் வேட்டையாட வந்ததாகக் கூறி மூன்று பேரை, அந்த மாநில வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழக சட்டப்பேரவையிலும், கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட டேவிட் குமார் மகள் பெஸ்ஸி, முதல்வர் விஜய் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக வெளியிட்ட விடியோ வைரலாகி உள்ளது.
Vijay Mama... Video released by the daughter of the man shot dead in Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.