‘காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் விருந்து’... இந்து சமய அறநிலையத்துறைக்கான அறிவிப்புகள்!
காமராஜர் பிறந்தநாளில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொதுவிருந்து நடத்தப்படும் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாளில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் இன்று (ஆக. 21) சட்டப்பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார்.
அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அறிவிப்புகள்:
Advertisement
Advertisement
நடப்பாண்டு 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோயில்களில் ரூ. 125 கோடியில் புனரமைப்பு பணி
சிதிலமடைந்த 150 கோயில்களில் 85 கோடி ரூபாய் செலவில் திருப்பணி
22 கோயில்களில் தேவையான திருப்பணிகள் செய்ய 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 கோயில்களில் மண்டபங்கள், சுற்று மண்டபம், வசந்த மண்டபம் மகா மண்டபம் இளைபாறும் மண்டபம் போன்றவை ரூ.21.37 கோடியில் கட்டித்தரப்படும்.
குச்சனூர் சனீஸ்வரர் கோயில் உள்பட 8 கோயில்களுக்கு ரூ.22.25 கோடி மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும்
சென்னை கொளத்தூர் சோமநாதர் கோயில் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பிரசன்ன பெருமாள் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 3 புதிய மரத்தேர் செய்யப்படும்
திருச்சி ரங்கநாதர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் உள்பட 105 கோயில்களில் திருக்குள பணிகளுக்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு
சமயபுரம் உள்ளிட்ட 3 கோயில்களில் ரூ. 11 கோடி மதிப்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி
காமராஜர் பிறந்த நாளில் கோயில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்
திருவண்ணாமலை, பழநி, சிறுவாபுரி, இருக்கன்குடி உள்ளிட்ட 22 கோயில்களில் 50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
பக்தர்கள் அதிகளவு வரும் 20 திருக்கோயில்களில் பக்தர்களின் நலன் கருதி 3 கோடி ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் நீண்ட சுற்று உடைய 38 கோயில்களி்ல சக்கர நாற்காலிகள் வாங்கப்படும்
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை ரயில்வே ஸ்டேசன் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து கோவிலுக்கு கட்டணம் இல்லாமல் அழைத்து வர 1 கோடி ரூபாயில் 4 மினிபஸ்கள் வழங்கப்படும்.
நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கு கட்டணம் இல்லாமல் சென்று வர 1 கோடி ரூபாய் செலவில் 2 பஸ்கள் இந்தாண்டு வழங்கப்படும்
16 கோயில்களில் 10.25 கோடி மதிப்பில் அன்னதான கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
கோயில் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் ஒப்படைக்கும் ஈட்டிய விடுப்பை 240 நாள்களாக உயர்த்தி கோயில் பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படும்.
கோயில் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் திருமணத்திற்கு ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் திருமணக்கடன் இனி முதுநிலை கோயில்களில் முதுநிலை கோயில் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத கோயில் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
கோயில் சார்பில் நடத்தப்படும் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையில், கோயில் பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, 50 சதவிகிதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
கோயில் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையாக பணி நியமனம் செய்ய திருக்கோயில் தேர்வு பணியாளர் தேர்வு வாரியம் இந்தாண்டு அமைக்கப்படும்
கோயில்களால் நடத்தப்படும் 4 பள்ளிகளில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 5.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அறுபடை வீடு கோயில்களை முன்மாதிரி கோயில்களாக மாற்ற திட்ட அறிக்கை
கிராம தெய்வங்களின் வழிபாட்டு மரபை போற்றும் வகையில் கிராம தெய்க கிராம திருவிழா நடத்தப்படும்.
அனைத்து மண்டலங்களிலும் கூத்து நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கிராமிய திருவிழா
கோயில் வளாகத்திலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம் 15 கோயில்களில் மேம்படுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் ஆயிரம் பேருக்கு அந்தந்த பகுதி முக்கிய கோயில்களுக்கு ஆன்மிக பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்
கோயில் நிலங்களில் அடர்வனம் மற்றும் நந்தவனம் அமைக்கப்படும்
சித்தர்களின் பெருமையை போற்றும் வகையில் விழா நடத்தப்படும்.
மருதமலை, அழகர்கோயில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.
மருதமலை கோயில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை
அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்டவசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும்.
பழநி கோயில் கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 3.10 கோடியில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும்.
மீண்டும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படும். கோவை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றின் கரையோரம், ரூ.3 கோடி மதிப்பில் யானைகள் நலவாழ்வு முகாம் மீண்டும் நடத்தப்படும்
மீனாட்சி அம்மன் கோயில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை நவீன சமையல் கூடம் அமைக்கப்படும்” என அவர் அறிவித்தார்.
Minister Ramesh announced in the Legislative Assembly that special prayers and public feasts would be held in temples on Kamarajar's birthday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.