FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவிப்பு...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:58 pm IST
கோப்புப் படம் - DNS
பகிர்:

2026 - 27 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று இன்று தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பின் கீழ் அவர் பேசியதாவது:

"தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கான குறுகிய கால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2026-2027-ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பயிர்க்கடன் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு. தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர்களின் குறுகிய காலக் கடன் தேவைகளுக்கு 2026-2027-ஆம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனக் கடன் வழங்கப்படும்.

விவசாய நிலமற்ற பட்டியல் இனத்தவருக்கு வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வாங்க மற்றும் பராமரித்திட, கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம் சார்ந்த மத்தியக் காலக் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு மூலதனக் கடன்கள் வழங்கப்படும்.

2026-2027 ஆம் நிதியாண்டில் 15.07.2026 வரை 12,752 விவசாயிகளுக்கு 159 கோடியே 41 இலட்சம் ரூபாய் அளவிற்குப் பயிர்க்கடனும், 19,324 நபர்களுக்கு 140 கோடியே 91 இலட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடை பராமரிப்புக் கடனும் வழங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடிக்குத் தகுதியான விவசாயிகளுக்கு வழங்க ஏதுவாக அரசால் முதல் தவணையாக 100 கோடி ரூபாய், இரண்டாம் தவணையாக 3,000 கோடி ரூபாய், மூன்றாம் தவணையாக 1,820 கோடி ரூபாய், நான்காம் தவணையாக 347 கோடி ரூபாய் என மொத்தம் 5,267 கோடி ரூபாய் முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

summary

TN Agriculture budget 2026: Crop loans worth Rs. 17,000 crore will be provided to farmers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments