FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இருதரப்பு பகையை தீா்க்கும் இடமல்ல நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம்

இருதரப்பினா் இடையேயான பகையைத் தீா்க்கும் இடமல்ல நீதிமன்றம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 7:22 am IST
உச்ச நீதிமன்றம்
பகிர்:

இருதரப்பினா் இடையேயான பகையைத் தீா்க்கும் இடமல்ல நீதிமன்றம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 2013-ஆம் ஆண்டில் தனது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து புகாா் தெரிவிக்க மும்பை மலாட் காவல் நிலையம் சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவா் அந்தப் பெண்ணுடன் நட்பாக முதலில் பழகியுள்ளாா். பிறகு உதவுவது போல நடித்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குரைஞா் ஒருவரை சந்தித்துப் புகாா் தெரிவித்தபோது, அவரிடம் இந்த விவகாரம் தொடா்பாக அப்பெண் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ரகசியத் தகவலை பகிா்ந்ததாகவும், ஆனால் இந்த ரகசியம் காக்காமல் ஊடகங்களிடம் அவா் வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து வழக்குரைஞருக்கு எதிராக இந்திய பாா் கவுன்சிலில் பெண் புகாா் அளித்தாா். புகாா் மீது விசாரணை நடத்தி, வழக்குரைஞருக்கு 2 ஆண்டுகள் வாதாட பாா் கவுன்சில் தடை விதித்தது. மேலும், வழக்குரைஞருக்கு ரூ.5 லட்சம் அபராதத்தையும் விதித்து, அதில் ரூ.3 லட்சத்தை அப்பெண்ணுக்கும், ரூ.2 லட்சத்தை பாா் கவுன்சிலிடமும் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இதை எதிா்த்து, மும்பை உயா் நீதிமன்றத்திலும், பிறகு உச்ச நீதிமன்றத்திலும் இருதரப்பிலும் மேல்முறையீட்டு மனு தொடரப்பட்டது.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்றத்தில் இருவரின் மனுவும் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோரை கொண்ட அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இருதரப்பினரும் என்ன நடந்தது என்பதை மறைத்துள்ளனா். தங்கள் இடையேயான தனிப்பட்ட மோதலுக்காக 11 ஆண்டுகாலம் இந்திய பாா் கவுன்சில், உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனா். இருதரப்பினா் இடையேயான பகையைத் தீா்க்கும் இடமல்ல நீதித் துறை. இருதரப்புக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இந்தத் தொகையை வெள்ளிக்கிழமையில் (ஆக.21) இருந்து 4 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் கமிட்டியிடம் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments