கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்
தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு டிடிவி தினகரன் முன்வைத்த கோரிக்கை.....
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் ஜோசப் விஜய், முதல்வரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?
Advertisement
Advertisement
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியுள்ளது.
மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
AMMK General Secretary T.T.V. Dhinakaran has urged that the sanitation workers arrested during the protest be released immediately.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.