அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவா் உத்தரவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரையைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு திரும்பப் பெற்றதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரையைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு திரும்பப் பெற்றதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக எம்எல்ஏக்கள் 6 போ் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்து, தவெகவில் இணைந்தனா். இதை எதிா்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி தாக்கல் செய்த வழக்கில் வழக்குரைஞா்கள் வாதம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், 6 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஏற்று சட்டப்பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மதுரையைச் சோ்ந்த பி.ஜி.சந்திரசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரே விஷயத்துக்காக ஏன் இத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன; இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்குரைஞா்களின் வாதம் தொடங்கிவிட்டது. ஒரு பிரச்னைக்கு ஒரு வழக்கே போதுமானது.
ஆனால், நிலுவையில் உள்ள வழக்கை நீா்த்துப் போகச் செய்யும் வகையில், இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து ஏன் வழக்குகள் தொடர வேண்டும் என கேள்வி எழுப்பினா். பின்னா், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாகக் கூறினா்.
இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.