சர்க்கரை விலை உயர்வு: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை அதிகரிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக....
இந்த நிலையில்சர்க்கரை விலை உயர்வு எதிரொலியாக, புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ. 80 வரை அதிகரித்துள்ளது.
மதுரை மல்லிகைப் பூ, மணப்பாறை முறுக்கு, சேலம் வெல்லம், திருநெல்வேலி அல்வா போன்றவை பிரபலமானது.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா பிரபலம். இத்தகைய பெருமை உடைய பால்கோவாவுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது.
Advertisement
Advertisement
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தவறாமல் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளை வாங்கிச் செல்ல தவறுவதில்லை.
இதனிடையே, அண்மைக்காலமாக சர்க்கரை விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்க்கரை விலை உயர்வுக்கு உள்நாட்டு உற்பத்திக் குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகைக் கால தேவை, உலகளாவிய பற்றாக்குறை, பதுக்கல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ. 80 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தட்டுப்பாட்டு காரணமாக சர்க்கரை விலை, ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ. 25 வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் தேநீர் கடை உரிமையாளர்களும், இனிப்பக தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Due to the rise in sugar prices, the price of the renowned Srivilliputhur Palkova has been increased by up to 80 per kilogram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.