ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரிலும் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதி
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளது குறித்து...
ராமேஸ்வரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா இன்று (ஆக. 25) சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேலும், ஓசூரில் கட்டாயம் விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தொழில் மானிய கோரிக்கை அறிவிப்பில் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:
Advertisement
Advertisement
வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க் அமைக்கப்படும்.
பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலை விபத்துகளை குறைக்க சிறப்பு நடவடிக்கை. சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்.
ஓசூரில் கட்டாயம் விமான நிலையம் அமைக்கப்படும். ராமேஸ்வரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணிக்கனேரியில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைக்க கருத்துரு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை - தூத்துக்குடி தொழில்வட திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை மத்திய தொழில் துறை அமைச்சர் கூறினார். கடந்த ஆட்சியில் தொழிற்பூங்காக்களில் அடிப்படை வசதிகள் இல்லை.
உளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிப்காட் பூங்காவில் வெளிப்படைத்தன்மையுடன் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
நிலக்கரிக்கு பதிலாக கருவேல மரங்கள் எரிபொருளாக பயன்படுத்தப்பட உள்ளது.
நில எடுப்புக்கு வருவாய், நீர்வளம், சுற்றுச்சூழல் துறை அனுமதிகளை விரைந்து வழங்க அமைச்சர் உதவ வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார்.
Plan to construct a new airport near Rameswaram: Minister Keerthana
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.