FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிதம்பரம், புவனகிரியைச் சேர்ந்த 11 பேர் நிலை என்ன?

நேபாள வெள்ளத்தில் சிதம்பரம், புவனகிரியைச் சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளது குறித்து...

26 ஆகஸ்ட் 2026, 5:51 pm IST
நேபாளத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த வெள்ளம் - பிடிஐ
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரியைச் சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 105 இந்தியர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலமாக நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற சிதம்பரம், புவனகிரி பகுதியைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேருந்துகளில் சென்ற மீதியுள்ள 37 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர் இவர்கள் திருக்கயிலாயம் செல்ல நேபாளம் சென்றுள்ளனர். நேபாள காவல்துறையினர், மீட்புப் படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம், புவனகிரி பகுதியிலிருந்து சென்று சிக்கியவர்கள் விபரம்: சிதம்பரத்தைச் சேர்ந்த முத்துக்குமரேசன், நாவு கபிர்தாஸ், விஜய புவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன், கனகசபை, ராதை, கலைமதி, பழனியப்பன், முருகானந்தம், புவனகிரியைச் சேர்ந்த திருபுரசுந்தரி.

summary

11 people from Chidambaram and Bhuvanagiri stranded in floods in Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments