FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 7 ரயில்வே தடங்களை 4 வழிப்பாதையாக மாற்ற தீவிர நடவடிக்கை

சென்னை உள்ளிட்ட நாட்டின் 7 நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களை 4 வழிப்பாதையாக மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை

27 ஆகஸ்ட் 2026, 2:03 am IST
பகிர்:

சென்னை உள்ளிட்ட நாட்டின் 7 நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களை 4 வழிப்பாதையாக மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையிலிருந்து புது தில்லி, ஹௌரா, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அந்த வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதேபோல, புது தில்லி, ஹௌரா, குவாஹாட்டி ஆகிய வழித்தடங்களிலும் அதிக ரயில்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய ரயில்வே துறை அமைச்சா் வைஷ்ணவ் ரயில் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல், அதன் பொருளாதார மேம்பாடுகளைச் சுட்டிக்காட்டி அண்மையில் பேசியுள்ளாா். அதில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கிய ரயில்வே தடங்களை நான்கு வழிப்பாதைகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அதன்படி ஹௌரா-சென்னை, புது தில்லி-ஹௌரா, சென்னை-மும்பை, புது தில்லி-சென்னை, மும்பை-ஹௌரா, புது தில்லி-குவாஹாட்டி, சென்னை-புது தில்லி ஆகிய 7 ரயில் வழித்தடங்கள் நான்கு வழிப்பாதைகளாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments