FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செப். 1 முதல் 45 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறித்து...

46 வினாடிகள் முன்பு
மேட்டூர் அணை / முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். செப். 1 முதல் 45 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேட்டூர் அணையிலிருந்து செப். 1 முதல் 45 நாள்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

செப். 1 ஆம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக முதல்வர் விஜய் நீரைத் திறந்து வைக்க உள்ளார்கள்.

2026–2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Mettur Dam to open on Sept. 1! Official announcement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments