FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாளத்திலிருக்கும் 3 புதுவை பயணிகள்! மீட்டுக் கொண்டு வர மகன் கோரிக்கை

நேபாளத்திலிருக்கும் 3 புதுவை பயணிகளை மீட்டுக் கொண்டு வர மகன் கோரிக்கை வைத்துள்ளார்.

3 புதுவை பயணிகள்
பகிர்:

புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் கைலாச யாத்திரை சென்று, நேபாள வெள்ளித்திலிருந்து மீண்டு பத்திரமாக இருப்பதாகவும், அரசு அவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும் என அவர்களது மகன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த விஷ்ணுராம் கூறுகையில், தனது தாய் கீதா, சகோதரி வைஷ்ணவி மற்றும் உறவினர் ஆனந்தசுந்தரி ஆகிய மூவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தனியார் சுற்றுலா முகமை மூலம் கைலாச யாத்திரைக்கு சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாளம் புறப்பட்டுச் சென்றதாகவும், திங்கள்கிழமை காலை காத்மாண்டு சென்றடைந்துள்ளனர். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி வந்ததாகவும், புதன்கிழமை காலையும் எங்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதன் பிறகு, இயற்கை பேரிடர்/சீரற்ற வானிலை காரணமாக அங்கு நிலைமை சரியில்லாததை தொலைக்காட்சி செய்திகள் வாயிலாக அறிந்து, அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது தொடர்பு கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில் புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறையிடமிருந்து மாலை 6:30 மணியளவில் வந்த தகவலின்படி, காணாமல் போனதாகக் கருதப்பட்ட மூவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும். நேரடித் தொடர்பு கிடைக்காததால் சற்று கவலையில் உள்ளதாக சோகத்துடன் தெரிவித்தார்.

அவர்களைத் தொடர்புகொண்டு பாதுகாப்பாக ஊருக்கு அழைத்து வர அரசு மற்றும் அதிகாரிகளின் உடனடி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

summary

Three travelers from Puducherry stranded in Nepal; son appeals for their rescue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments